வெடிப்பிலிருந்து ஒரு ஆசீர்வாதம்
Blessings Out of Blastings – TAM
“கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர் (சங்கீதம்.5.12)
ஒவ்வொரு தேவனுடைய மனிதர்களின் வாழ்க்கையிலும் ஒரு சூழற்சியை நாம் பார்க்க முடியும். கேரித் ஆற்றங்கரையில் தண்ணீர் வற்றி அந்த அமைதியான நேரம் முடிவுக்கு வர, சாரிபாத் விதவையின் வீட்டில் ஏற்பட்ட பெருக்கம் முடிவுக்கு வர… விதவையின் மகன் மரித்துபோக தேவன் மீதும் எலியாவின் மீதும் கோபத்தை தூண்டுவதற்கு ஏதுவாக அமைந்தது (1இராஜாக்கள்.17.17-24)
தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு ஆசீர்வாதத்தின் சூழற்சியானது ஒரு வெடிப்பை பின்தொடர்ந்து வருகிறது அசாதாரணமானது அல்ல. பெரும்பாலும் ஒரு பெரிய வெற்றி பெரிய சோதனையை பின்தொடர்ந்தே வரும். 1987-ல் நாங்கள் ஒரு தேவாலயத்தை கட்டின போது இந்த அனுபவத்தை நான் அடைந்தேன். தேவாலயம் ஆசீர்வதிக்கப்படக்கூடிய எல்லா வழிகளிலும் ஆண்டவர் எங்களை ஆசீர்வதித்தார். ஒரு ஹோட்டல் அறையில் நடந்த முதல் கூட்டத்தில் இருபத்தெட்டு பேர் கலந்துகொண்டனர். அடுத்த வாரத்தில் எண்ணிக்கை அறுபதாக அதிகரித்தது. மேலும் பக்தியுள்ள விசுவாசிகள் தொடர்ந்து குவிந்தனர். காலை, மதியம், இரவு என மக்களை சந்தித்து அதன் மூலமாக அபரிமிதமான வளர்ச்சியை தொடர ஓடினேன்.
ஆனால் 1989-ல் இரண்டு முறை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டேன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம் படுத்துக்கொள்வதுதான். எலியாவைப்போல ஆண்டவர் என்னையும் ஒரு அமைதியான இடத்தில் வைத்து அவருடைய குரலைக் கேட்கும்படி வைத்தார். நான் அவருக்கு முதலில் ஊழியம் செய்தால் மட்டுமே மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும் என்று அவர் எனக்கு கற்றக்கொடுத்தார். எனது சொந்த சுய பெலத்தால் ஒன்றும் செய்ய முடியாது அவருடைய பெலத்தால் மாத்திரமே முடியும் என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்.
ஒவ்வொரு முறையும் நாம் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தால், ஒவ்வொரு வெடிப்பிலிருந்தும் தேவன் நமக்கு ஆசீர்வாதத்தை தந்துகொண்டிருப்பார்.
ஜெபம்: ஆண்டவரே, கடினமான நேரங்களிலும் எனக்கு ஆசீர்வாதங்கள் இருக்கிறது என்பதை இன்று நீர் எனக்கு நினைப்பூட்டியதற்காக நன்றி. இன்று எனக்குரிய ஆசீர்வாதங்களை தேட உதவிசெய்யும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.