ஒரு திருப்புமுனையை சந்திப்பது
Facing a Crossroads – TAM
“கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.” (யோசுவா.24.15)
1இராஜாக்கள்.18ல் நாம் பார்க்கும்போது இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு சந்திப்பில் நிற்கிறார்கள். ஆண்டவர் மீது கொண்டிருந்த பயப்பக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களை பொறுத்தமட்டும் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை விட்டு மில்லியன் மைல் தூரம் இருந்தார். ஆண்டவர் தம்முடைய மகத்துவமான வல்லமையை நினைப்பூட்டும்போது மாத்திரமே இந்த மக்களுடைய ஆவிக்குரிய மந்தாரத்தை போக்கமுடியும் என்பதை ஆண்டவர் நன்று அறிந்திருந்தார். எனவே ஆண்டவர் இம்மக்களுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த எலியாவை பயன்படுத்தினார். ஒரு மனிதன் நூற்றுக்கணக்கான பாகால் தலைவர்களுக்கு முன்பாக எலியா ஆண்டவருடைய வல்லமையை விளங்கப்பண்ணினார்.
1இராஜாக்கள் 18.22-30ல் ஜனங்கள் ஒரு நூதனமான சவாலை பார்த்தார்கள். இரண்டு வித்தியாசமான விறகு குவியல்களில் இரண்டு காளைகளை பலியிடுகிறார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் யார் நெருப்பை ஏற்ற முடியும் பாகாலா அல்லது தேவனா? ஆண்டவருடைய மகத்துவத்தை முழுமையான நம்பிக்கையுடன் சார்ந்துகொண்ட எலியா 850 பாகால் தீர்க்கதரிகள் தங்கள் பொய்யான கடவுளை தூக்கத்திலிருந்து எழுப்ப முயற்சிப்பதை பார்த்தார். பல மணி நேரங்களாக, பாகாலுக்காக பலிபீடத்திற்கு முன்பாக நடனம் ஆடிக்கொண்டும், பாகாலை கூப்பிட்டுக்கொண்டும், தங்கள் உடல்களை காயப்படுத்திக்கொண்டும் இருந்தார்கள்.
அதன் பிறகு எலியா முன்வந்தார். தேவனுடைய பலிபீடத்தை எலியா பார்த்தார். தகர்க்கப்பட்ட பலிபீடத்தை 12 கற்களைக் கொண்டு செப்பனிட்டார். 12 கற்கள் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை குறிக்கிறது. நடக்கப்பபோவது ஆண்டவருடைய அற்புதமே தவிர தன்னிடத்தில் ஒரு தந்திரமும் இல்லை என்பதை காண்பிக்கவே பலிபீடத்தின் மீது தண்ணீரை ஊற்றினார். அக்கினியை தேவன் வானத்திலிருந்து அனுப்பின உடனே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் நினைவிற்கு திரும்பினார்கள். “ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்து கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் என்றார்கள்” (1இராஜாக்கள்.18.39)
நமக்குள் நெருப்பை பற்றியெறிய செய்வதும், நம்மை சுத்திகரித்து தூய்மைப்படுத்தவும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமை நமக்கு இருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் திருப்புமுனைகளை சந்திக்கும்போது, சரியான திசையில் நாம் நடக்க நாம் எப்பொழுதுமு; ஆண்டவரிடம் திரும்பிக்கொள்வோம்.
ஜெபம்: தகப்பனே, பாகாலை பின்பற்றின தலைவர்களை எதிர்த்து நிற்க எலியாவிற்கு நீர் கொடுத்த தைரியத்திற்காக உமக்கு நன்றிசெலுத்துகிறோம். நானும் என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை சந்திக்கும்போதும், சரியான தெரிந்தெடுத்தலை நான் தேர்ந்தெடுக்க எனக்கு நீர் உதவிசெய்யும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.