ஆண்டவருடைய திட்டங்கள்

ஆண்டவருடைய திட்டங்கள்

God’s Strategies – TAM

கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்தவாராக” 1தெசலோனிக்கேயர்.3.5

குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரே நபராக எலியா இருந்தபோதிலும், தன்னுடைய தேசத்தை அலைகளை திருப்பினார். விதவைத் தாய் தனக்காக அல்ல தேவனுடைய மனிதனுக்காக தனது கடைசி மாவை அப்பமாக உருவாக்கி வித்தியாசத்தை ஏற்படுத்தினாள். ஆண்டவர் மக்களுடைய இதயத்தில் ஒரு தனித்துவமான சேவையை வைக்கிறார். அதோடுகூட ஆண்டவருடைய மகத்துவமான சித்தத்திற்கு கீழ்ப்படிகிற ஒவ்வொருவரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்.

பெரும்பாலும் ஆண்டவருடைய திட்டங்கள் நமக்கு புரியாதது போன்று காணப்படும். ஏனெனில் ஆண்டவரைப் போன்ற நம்முடைய தரிசனம் இல்லாமல் குறைவான தரிசனத்தோடு நாம் இருக்கிறோம். ஆண்டவர் எலியாவை அவனுடைய எதிரியின் தேசத்திற்கு அழைத்துச்சென்றபோது, ஆகாபுடைய வீரர்கள் எலியாவை தேடும் கடைசி இடம் அதுவே என்பது ஆண்டவருக்கு நன்கு தெரியும். நம்முடைய பொது அறிவு பஞ்சம் இருக்கிறதே என்று சொன்னாலும் சாரிபாத் ஊர் விதவை எலியாவிற்கு அப்பம் தந்து அவருடைய பசியை நீக்குவாள் என்பது ஆண்டவருக்கு நன்கு தெரியும். மிகவும் முக்கியமாக ஆண்டவர் எலியாவிற்கு உணர்த்தின காரியம் பாகாலை வணங்கக்கூடிய ஒரு விதவையையும் அவள் குடும்பத்தின் மீது எவ்வாறு தான் அக்கறையுடன் இருக்கிறார் என்பதை எலியாவிற்கு காட்டினார்.

ஆண்டவர் ஒரே நேரத்தில் பல விதங்களில் செயல்படுவதால் அவருக்கு பல குறிக்கோள்கள் இருக்கின்றன. நாமும் அவருடைய வழியை பின்பற்றினால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். மற்றவர்களுக்கும் நாம் ஒரு ஆசீர்வாத கருவிகளாக மாறுவோம்.

எந்த அர்த்தமும் இல்லாத ஒன்றைச் செய்யும்படி ஆண்டவர் எப்போதாவது உங்களைத் தூண்டியிருக்கிறாரா? ஆனால் அது ஆண்டவருடைய மகத்துவமான சித்தமாகும். நீங்கள் ஆதரவாக நினைக்கும் மக்கள், எதிர்காலம் அல்லது பொருளாதாரம் ஆகியவற்றை விட்டு வெளியேறும்படி ஆண்டவர் உங்களிடம் கேட்கிறாரா? ஊழியத்திலோ அல்லது அவருடனான தனிப்பட்ட உறவிலோ புதிய திருப்பத்தை தருவதற்கு உங்கள் இதயத்தை தூண்டுகிறாரா?

 

ஜெபம்: ஆண்டவரே உம்முடைய திட்டங்கள் சில சமயங்களில் வசதியாக இல்லாமல் குழப்பமாக இருக்கிறது. ஆனாலும் நான் உம்முடைய அழைப்பிற்கு கீழ்ப்படிகிறேன். ஏனென்றால் நான் பார்க்காத ஒன்றை உம்மால் பார்க்க முடியும் என்பதை நான் நம்புகிறேன். நான் உமக்கு கீழ்ப்படியும்போது, நீர் என்னை ஆசீர்வதிப்பீர் மேலும் என்னைக்கொண்டு பலரை ஆசீர்வதிப்பீர். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.


மேலும்

LTW Global | Leading The Way with Dr.Michael Youssef